நெல்லையில் 99 டிகிரி வெயில்
நெல்லையில் 99 டிகிரி வெயில் இருந்தது.
திருநெல்வேலி
தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நெல்லையில் நேற்று அதிகபட்சமாக 99 டிகிரி (பாரன்ஹீட்) பதிவாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், சிறுவர்கள், முதியவர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டியது அவசியமாகும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story