வாலிபரிடம் 1½ பவுன் சங்கிலி பறிப்பு


வாலிபரிடம் 1½ பவுன் சங்கிலி பறிப்பு
x

வாலிபரிடம் 1½ பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி காந்திமார்க்கெட் அருகே வரகனேரி பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 18). இவர் நேற்று பெல்ஸ்மைதானம் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 மர்ம ஆசாமிகள், அந்தோணியை மறித்து, அவர் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.


Next Story