10 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது
10 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது.
புதுக்கோட்டை
கறம்பக்குடி:
கறம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் பெரிய கருப்பர்கோவில் அருகே பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு உள்ள குளத்தில் பேரூராட்சி சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் தூர்வாரி மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று காலை தொழிலாளர்கள் மராமத்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவன் கோவில் கோபுரம் அருகே சுமார் 10 அடி நீளமுள்ள பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்தனர். இதுகுறித்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கோபுர இடிபாடுகளில் பதுங்கி இருந்த நாகப்பாம்பை அதற்குரிய கருவியின் மூலம் பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை சாக்கு பைக்குள் போட்டு அடர்ந்த வனபகுதிக்குள் கொண்டு விட்டனர்.
Related Tags :
Next Story