10 அடி நீள மலைபாம்பு பிடிபட்டது


10 அடி நீள மலைபாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 24 Nov 2022 7:30 PM GMT (Updated: 2022-11-25T01:00:49+05:30)

10 அடி நீள மலைபாம்பு பிடிபட்டது.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:-

வேப்பனப்பள்ளி அருகே விருப்பச்சந்தரம் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவரது தோட்டத்தில் விவசாயிகள் நெல் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. இதை கண்ட விவசாயிகள், பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து கொங்கணப்பள்ளி காப்பு காட்டில் பாதுகாப்பாக விட்டனர்.


Next Story