சென்னை ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 10 வயது சிறுவன் - காரணத்தை கேட்டு அதிர்ந்து போன போலீஸ்...!


சென்னை ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 10 வயது சிறுவன் - காரணத்தை கேட்டு அதிர்ந்து போன போலீஸ்...!
x
தினத்தந்தி 8 Aug 2022 7:01 AM GMT (Updated: 2022-08-08T12:38:44+05:30)

சென்னை ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 10 வயது சிறுவனை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.

சென்னை,

சென்னை திருவொற்றியூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் சுற்றித்திரந்த 10 வயது சிறுவனை போலீசார் மீட்டனர். பின்னர், சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, அந்த சிறுவன் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் என்பதும், பெற்றோரிடம் சண்டையிட்டு கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தது தெரியவந்து.

இதனை தொடர்ந்து சிறுவனுக்கு அறிவுரை கூறிய போலீசார், சாப்பிட பிரியாணி வாங்கி கொடுத்து பத்திரமாக பெற்றோரிடம் சிறுவனை ஓப்படைத்தனர்.


Next Story