வகுப்பறையில் இருந்து வெளியேறிய 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை


வகுப்பறையில் இருந்து வெளியேறிய 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
x

பள்ளி வகுப்பறையில் இருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறிய 10-ம் வகுப்பு மாணவி தனது வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதுநகர்

ராஜபாளையம்,


பள்ளி வகுப்பறையில் இருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறிய 10-ம் வகுப்பு மாணவி தனது வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

10-ம் வகுப்பு மாணவி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தை ேசர்ந்தவர் ராமலட்சுமி. இவருடைய மகள் முத்துலட்சுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தாய் ராமலட்சுமி வயல் வேலைக்கு சென்று விட்டார். முத்துலட்சுமி நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார்.

இந்தநிலையில் அவர் திடீரென பள்ளி வகுப்பறையில் இருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் ஆகியும் அவர் மீண்டும் வராததால் மற்ற மாணவிகள் அவரை தேடி பார்த்தனர். ஒருவேளை வீட்டிற்கு அவர் சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீட்டிற்கு சென்றனர்.

வீட்டில் தற்கொலை

அப்போது முத்துலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளும், ஆசிரியர்களும், ராமலட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பதறியபடி ஓடிவந்து பார்த்தார். பிணமாக மகளை கண்டு அவர் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேத்தூர் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பள்ளியில் இருந்து பாதியில் வீடு திரும்பிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என மாணவியின் தாய், பள்ளிக்கூடத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story