500 கிலோ பூக்களால் உருவான 12 அடி உயர மாலை- கிரேன் உதவியுடன் கட்டப்பட்டது


500 கிலோ பூக்களால் உருவான 12 அடி உயர மாலை- கிரேன் உதவியுடன் கட்டப்பட்டது
x

500 கிலோ பூக்களுடன் 12 அடி உயர மாலை, கிரேன் உதவியுடன் கட்டப்பட்டது.

மதுரை


500 கிலோ பூக்களுடன் 12 அடி உயர மாலை, கிரேன் உதவியுடன் கட்டப்பட்டது.

500 கிலோ பூக்கள்

மதுரை மல்லிகைப்பூ மிகவும் பிரபலம். அது போல பூ மாலைகள் கட்டுவதில் திறமையான கலைஞர்கள் மதுரையில் பலர் உள்ளனர். ஏனென்றால் மாதம் தோறும் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களை இந்த கைவினை கலைஞர்களின் மாலைகள்தான் அலங்கரிக்கின்றன. வெளியூரில் இருந்து கூட ஏராளமானோர் மதுரையில்தான் விதவிதமான மாலைகளை ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். அந்த வகையில் தற்போது 500 கிலோ பூக்களுடன் 12 அடி உயர மாலையை, மதுரை ஜெயில் ரோடு பகுதியில் உள்ள பூக்கடைக்காரர் முத்தையா என்பவர் கட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நாங்கள் எங்களுக்கு கிடைக்கும் ஆர்டர்களுக்கு ஏற்ப பூ மாலை செய்து தருவோம். கடந்த காலங்களில் 10 அடி உயரம் வரை பூ மாலை கட்டி உள்ளோம். உசிலம்பட்டியில் நடக்கும் ஒரு கட்சி நிகழ்ச்சிக்காக 12 அடி உயரத்தில் மாலை ஆர்டர் கொடுத்து இருந்தார்கள். அதற்காக 500 கிலோ பூக்களுடன் இந்த மாலையை கட்டி உள்ளோம்.

ரூ.3 லட்சம்

இந்த மாலையில் செவ்வந்தி, ரோஜா, கேந்தி உள்ளிட்ட பல வகையான மலர்களை பயன்படுத்தி உள்ளோம். இந்த மாலை கிரேன் உதவியுடன் கட்டப்பட்டு உள்ளது. இந்த மாலையை கிரேன் உதவியுடன்தான் ஒருவருக்கு அணிவிக்க முடியும். இந்த மாலையை ரூ.70 ஆயிரத்திற்கு விற்பனை செய்து இருக்கிறோம். அடுத்த மாதம் முக்கிய பிரமுகரின் வீட்டு நிகழ்ச்சிக்காக வெட்டி வேர்களை பயன்படுத்தி 15 அடி உயரத்திற்கு மாலை கட்ட உள்ளோம். அதன் விலை ரூ.3 லட்சம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story