கூடலூர் தொரப்பள்ளியில் 13 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது


கூடலூர் தொரப்பள்ளியில் 13 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
x

கூடலூர் தொரப்பள்ளியில் 13 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் தொரப்பள்ளியில் தனியார் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பண்ணையில் வளர்ந்திருந்த புதர்களை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது புதர்களுக்கு இடையே மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடப்பதை கண்டு தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடினர்.

இது குறித்து கூடலூர் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனச்சரகர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.பின்னர் சுமார் 13 அடி நீள மலைப்பாம்பை பிடித்து முதுமலை வனத்தில் கொண்டு விட்டனர். அதன் பின்னரே தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.


Next Story