சிதம்பரத்தில் 13 வயது சிறுமிக்கு திருமணம்; தீட்சிதர் கைது
சிதம்பரத்தில் 13 வயது சிறுமியை திருமணம் செய்த தீட்சிதர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரம் கீழ வீதியை சேர்ந்தவர் பத்ரிசன் (வயது 19). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிதம்பரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய சிறுமிக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் 13 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததாக கடலூர் மகளிர் ஊர் நல அலுவலர் சித்ராவுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விசாரணை நடத்தியதில், 18 வயது பூர்த்தியாகாத சிறுமிக்கு, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து சித்ரா, கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பத்ரிசன் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீட்சிதரான சூர்யா என்கிற தீவர்ஷா (23) என்பவரை கைது செய்தனர். சிறுமி திருமண வழக்கில் தீட்சிதர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.