மூதாட்டியிடம் 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் 2 பவுன் தங்க சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர்.
திருச்சி
துறையூர், நவ.9-
துறையூரை அடுத்த புலிவலம் போலீஸ் சரகம் மூவானூர் அரசு உயர்நிலை பள்ளி அருகே பெட்டிகடை நடத்தி வருபவர் சீதா (வயது 60). நேற்று முன்தினம் இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் பிஸ்கெட் வேண்டும் என கேட்டுள்ளனர். இதனையடுத்து சீதா பிஸ்கெட் எடுப்பதற்காக எழுந்தபோது, அந்த ஆசாமிகள் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீதாவிடம் தங்க சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story