வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை தவறி விழுந்து சாவு
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை தவறி விழுந்து இறந்தது
மதுரை
மதுரை பழங்காநத்தம் பசும்பொன்நகர் மாணிக்கவாசகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் கோகுலன். இவரது இரண்டு வயது குழந்தை பிரஜின்தேவ். சம்பவத்தன்று குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கால் தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலமாக அடிபட்டது. அதை கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது குழந்தை பிரஜின்தேவ் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story