டிராக்டரில் இருந்து விழுந்த 2 வயது குழந்தை பலி
டிராக்டரில் இருந்து விழுந்த 2 வயது குழந்தை பலியானது
காட்டுப்புத்தூர், ஜூலை.31-
காட்டுப்புத்தூர் அருகே உடையாகுளம்புதூரை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி ரத்தினம் (வயது 31). இந்த தம்பதியின் மகன் சஞ்சித் (2). சம்பவத்தன்று ரத்தினம் மகனுடன் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்றார். அப்போது சஞ்சித் அழுது கொண்டிருந்தான். இதனால் அங்கு தோட்டத்தில் டிராக்டரில் ஏர் உழுது கொண்டு இருந்த மதியழகனிடம் குழந்தை அழுகிறது சற்று நேரம் டிராக்டரில் உட்கார வைத்து கொஞ்ச தூரம் வண்டி ஓட்டுமாறு கூறி குழந்தையை டிராக்டரில் உட்கார வைத்துள்ளார். கொஞ்ச தூரம் சென்றதும் வண்டியை பிரேக் போடும்போது குழந்தை தவறி கீழே விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த சஞ்சித் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தான். இது குறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.