2 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு


2 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
x

உசிலம்பட்டி அருகே 2 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே 2 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

2 ஆயிரம் ஆண்டு முதுமக்கள் தாழி

உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை அடிவாரத்தில் உள்ள அயன்மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவர் தனது தோட்டத்தின் அருகில் வீடு கட்டுவதற்காக நிலத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது பழமையான முதுமக்கள் தாழி ஒன்று இருப்பதை கண்டார். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து தகவலறிந்து தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில்,மண்ணில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி 1½ அடி அகலத்திலும், 5 அடி உயரத்திலும் இருந்தது. அதோடு அது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது எனவும் தெரிய வந்தது.

இரும்பு பொருட்கள்

ேமலும் கள ஆய்வின் போது அந்த பகுதியில் இரும்பு சார்ந்த எச்சங்களும் கிடைத்தன. இதனால் முன்பு இந்த பகுதி ெதாழில் வர்த்தகத்தில் சிறந்து விளங்கி இருக்கலாம்..

இருப்பினும் இப்பகுதியில் முழுமையான கள ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல வரலாற்று எச்சங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.இந்த ஆய்வின் போது தொல்லியல் ஆர்வலர், உசிலம்பட்டி தாசில்தார் கருப்பையா மற்றும் வருவாய்துறையினர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story