5½ அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பிடிபட்டது
5½ அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பிடிபட்டது.
புதுக்கோட்டை
திருமயம் அருகே சமத்துவபுரம் நகரை சேர்ந்தவர் காந்தி. இவர் தனது வீட்டின் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில், வீட்டின் கட்டிட வேலைக்காக சிமெண்டு மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று மாலை கொட்டகைக்குள் சென்ற போது, பெரிய சாரைப்பாம்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காந்தி திருமயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 5½ அடி நீளமுள்ள சாரைப்பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் அந்த சாரைப்பாம்பை வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
Related Tags :
Next Story