தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு


தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
x

கரூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்

தங்கச்சங்கிலி பறிப்பு

கரூர் அருகே உள்ள பழையூர் பகுதிக்குட்பட்ட கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயமால் (வயது 70). இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் ஜெயமால் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயமால் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.

வலைவீச்சு

இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் தங்கச்சங்கிலியுடன் தாங்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து ஜெயமால் வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து, தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story