வீட்டின் மாடியில் புகுந்த 6 அடி நீள கருநாக பாம்பு
வீட்டின் மாடியில் புகுந்த 6 அடி நீள கருநாக பாம்பு
முத்துப்பேட்டையில், வீட்டின் மாடியில் புகுந்த 6 அடி நீளமுள்ள கருநாக பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டில் விட்டனர்.
6 அடி நீள கருநாக பாம்பு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை குட்டியார் பள்ளி வடக்கு தெருவை சேர்ந்தவர் முகமது கட்டி. நேற்று காலை இவர் தனது வீட்டின் மாடிக்கு சென்றார்.
அப்போது மாடியில் 6 அடி நீளமுள்ள கருநாக பாம்பு புகுந்தது. இதனை பார்த்த அவர் பாம்பை விரட்ட முயன்றார். அப்போது பாம்பு அவரை பார்த்து சீறி படம் எடுத்தது.
காட்டில் விடப்பட்டது
இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது கட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் இதுகுறித்து முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பு பிடிக்கும் கருவியை வைத்து பாம்பை பிடித்தனர்.
பின்னர் அந்த பாம்பை சாக்குப்பையில் போட்டு காட்டு பகுதியில் விட்டனர். தீயணைப்பு வீரர்கள் பாம்டை பிடித்த பின்னரே முகமது கட்டி அவரது குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.