கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த 6 கிராம் தங்க சங்கிலி திருட்டு

கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த 6 கிராம் தங்க சங்கிலி திருட்டு
x

கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த 6 கிராம் தங்க சங்கிலி திருட்டு

தஞ்சாவூர்

தஞ்சை அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவர் தன்னுடைய வீட்டு காம்பவுண்டில் சிறிய கோவில் வைத்துள்ளார். அந்த கோவிலில் அம்மனுக்கு 6 கிராம் தங்க சங்கிலி அணிவிக்கப்பட்டிருந்தது. சம்பவத்தன்று கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அப்போது தான் தங்க சங்கிலியை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 கிராம் தங்க சங்கிலியை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story