அரசு பஸ் மோதி 6 மாத குழந்தை பலி
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் தாய் கண்முன் 6 மாத குழந்தை பலியானாது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் தாய் கண்முன் 6 மாத குழந்தை பலியானாது.
அரசு பஸ் மோதியது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மூவலூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது35). இவருடைய மனைவி புவனேஸ்வரி (28). இவர்களுடைய மகள்கள் சஹானா (3), பவுன்சிகா( 6மாத குழந்தை).இந்த நிலையில் நேற்று மதியம் புவனேஸ்வரியின் தந்தை நடராஜன்(55) ஒரு ஸ்கூட்டரில் புவனேஸ்வரி, சஹானா, பவுன்சிகா ஆகியோரை ஏற்றி கொண்டு தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.மல்லியம் கைகாட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது பின்னால் மயிலாடுதுறையில் இருந்து செருகடம்பூர் சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதனால் ஸ்கூட்டரில் சென்ற நடராஜன், புவனேஸ்வரி, சஹானா, குழந்தை பவுன்சிகா ஆகியோர் கீழே விழுந்தனர்.
6 மாத குழந்தை பலி
இதில் 6 மாத குழந்தை பவுன்சிகா தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேேய பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் இந்த விபத்தில் புவனேஸ்வரி, நடராஜன் சஹானா ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து தகவல் அறிந்து குத்தாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
டிரைவரிடம் விசாரணை
இதுதொடர்ந்து விபத்துக்கு காரணமான அரசு பஸ்சை போலீசார் பறிமுதல் செய்து பஸ் டிரைவர் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே காவனூர் பகுதியை சோந்்த இளங்கோவன் ( 56) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அரசு பஸ் மோதி 6 மாத குழந்தை தாய் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.