பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கி வந்த பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கி வந்த பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
x

பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கி வந்த பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கி வந்த பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பொங்கல் பரிசு தொகுப்பு

திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் நேரு தெருவை சேர்ந்தவர் தமிழரசி (வயது 62). இவர் நேற்று வீட்டு அருகே உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிக்கொண்டு நடந்து வந்தார்.அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் திடீரென்று தமிழரசி அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழரசி கூச்சல் போட்டார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

வலைவீச்சு

இதுகுறித்து தமிழரசி அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசியிடம் தங்க சங்கிலியை பறித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story