கழிவறை தொட்டியில் விழுந்து 9 வயது சிறுமி பலி
கழிவறை தொட்டியில் விழுந்து 9 வயது சிறுமி பலியானாள்.
சேத்துப்பட்டு
கழிவறை தொட்டியில் விழுந்து 9 வயது சிறுமி பலியானாள்.
சேத்துப்பட்டு அருகே உள்ள கரிப்பூர் கிராமத்தின் அருகே உள்ள மோட்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். கூலி தொழிலாளி |இவருக்கு இரண்டு மகள்கள். இதில் 2-வது மகள் ஷாலினி (வயது 9) 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.இவரது வீட்டு முன்பு கழிவறைக்கான செப்டிக் டேங்க் தொட்டி அமைக்கப்பட்டு சிலாப் போட்டு மூடப்பட்டுள்ளது. அந்த சிலாப் வலுவிழந்த நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் சிறுமி ஷாலினி வீட்டு முன் விளையாடிக்கொண்டிருந்தாள். ெதருவில் இருந்து வீட்டுக்குளன் டி வந்த நிலையில் சிலாப் மீது மிதித்தபோது உடைந்ததில் ஷாலினி கழிவறை தொட்டிக்குள் விழுந்து விட்டாள்.
இதில் அவள் மூச்சுத்திணறி இறந்து விட்டாள். இதுகுறித்து போலீசார் விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு அவர்கள் ஷாலினி உடலை மீட்டனர். போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்,