உசிலம்பட்டி அருகே 70 வயது முதியவரை கழுத்தை அறுத்துக்கொன்ற 90 வயது முதியவரால் பரபரப்பு


உசிலம்பட்டி அருகே 70 வயது முதியவரை கழுத்தை அறுத்துக்கொன்ற 90 வயது முதியவரால் பரபரப்பு
x

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், 70 வயது முதியவரை கழுத்தை அறுத்து 90 வயது முதியவர் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை

உசிலம்பட்டி,

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், 70 வயது முதியவரை கழுத்தை அறுத்து 90 வயது முதியவர் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.குன்னுத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). விவசாயி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினரான வேலுச்சாமி(90) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பணம் கேட்டுச் சென்ற வேலுச்சாமியை, ராமசாமி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

கொலை வழக்கில் கைது

இதனால் ஆத்திரம் அடைந்த வேலுச்சாமி திடீரென அரிவாளால் ராமசாமியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராமசாமி அலறினார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு வந்தனர். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ராமசாமி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 90 வயது முதியவரான வேலுச்சாமியை கைது செய்த உசிலம்பட்டி தாலுகா போலீசார், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story