பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு; கணவர் கைது
செஞ்சி அருகே பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு; கணவர் கைது
செஞ்சி
செஞ்சி அருகே உள்ள கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 52). இவரது மனைவி லட்சுமி(48). ஏழுமலை தினமும் மது குடித்துவிட்டு வந்து அவரது மனைவியின் மீது சந்தேகப்பட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை மதுபோதையில் வந்த ஏழுமலை அவரது மனைவியை ஆபாசவார்த்தைகளால் திட்டியபடி தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர் அரிவாளால் லட்சுமியின் கழுத்து, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து லட்சுமியின் மகள் பிரேமா கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.