மக்களின் அணுகுமுறை குறித்த அடிப்படை ஆய்வு


மக்களின் அணுகுமுறை குறித்த அடிப்படை ஆய்வு
x

2024-ல் நாடாளுமன்ற தேர்தலுக்கான மக்களின் அணுகுமுறை குறித்த அடிப்படை ஆய்வு நடத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர்


2024-ல் நாடாளுமன்ற தேர்தலுக்கான மக்களின் அணுகுமுறை குறித்த அடிப்படை ஆய்வு நடத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடிப்படை ஆய்வு

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024-ல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் தொடர்பாக மக்களின் அணுகுமுறை பழக்க வழக்கங்கள் குறித்த அடிப்படை ஆய்வு விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி, ராஜபாளையம் மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்கு சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களிடம் நடப்பு மாதத்தில் நடைபெற உள்ளது.

தேர்தல் பற்றிய மக்களின் நம்பிக்கை, வாக்காளர் பதிவு மற்றும் வாக்காளர் பதிவு செய்யாமைக்கான காரணம், வாக்காளர் இடையே கல்வியின் தாக்கம், புலம் பெயர்வு காரணமாக பதிவு செய்யப்படாத வாக்காளர்களின் எண்ணிக்கை, அஞ்சல் வாக்குகள் பற்றிய விழிப்புணர்வு ஆகிய விவரங்கள் சேகரிப்பது இந்த ஆய்வின் நோக்கமாகும்.

கணக்கெடுப்பு முறை

வாக்காளர்களில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு, தேர்தல் பங்கேற்பின் முதல் முயற்சி முன்னெடுத்து செல்வது, வலுப்படுத்துவது மற்றும் பல்வேறு தேர்தல் பதிவு இடைவெளிகளை குறைப்பதற்காகவும் திட்டமிடுவதற்காகவும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் 10 வாக்காளர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது.

இள வயது வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலின வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், முதல் முறை வாக்காளர்கள் மற்றும் வயது முதிர்ந்த வாக்காளர்களாகிய அவர்களிடம் முன்னுரிமை அடிப்படையில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்களால் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது.

களப்பணி

எனவே உண்மையான புள்ளி விவரங்களை அளித்து ஒத்துழைப்பு நல்குமாறும் மக்களால் கொடுக்கப்படும் புள்ளி விவரங்கள் மிகவும் முக்கியமாக பாதுகாக்கப்படும் என்றும் மேற்படி விவரங்களின் அடிப்படையில் தேர்தல் தொடர்பான கொள்கை முடிவுகளையும், திட்டங்களையும் மேற்கொள்ள உள்ளதால் பொதுமக்கள் களப்பணி மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது


Related Tags :
Next Story