அரசு அலுவலகத்துக்குள் புகுந்த கரடி


அரசு அலுவலகத்துக்குள் புகுந்த கரடி
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் அரசு அலுவலகத்துக்குள் புகுந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கரடிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து வருகின்றன. குன்னூர் சிம்ஸ் பூங்கா நர்சரி அருகே தோட்டக்கலைத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே வனப்பகுதியும் உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று, நேற்று முன்தினம் இரவு தோட்டக்கலை அலுவலக கதவை உடைத்து உள்ளே புகுந்தது. அலுவலக முன்புறம் பூஜைக்கு வைக்கப்பட்டு இருந்த எண்ணெய்யை குடித்தது. அங்கிருந்த கணினியை சேதப்படுத்தியது. பின்னர் மாடி படியில் ஏறி சென்ற கரடி, அங்கு பணியாளர்கள் வைத்திருந்த சர்க்கரை, தேயிலைத்தூள் போன்றவற்றை தின்றும், கொட்டியும் சேதப்படுத்தியது. பின்னர் அங்கிருந்து கரடி வனப்பகுதிக்குள் சென்றது. தகவல் அறிந்த வனத்துறையினர் கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே, கூண்டு வைத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Next Story