கோத்தகிரி அருகே சாலையில் உலா வந்த கரடி


கோத்தகிரி அருகே சாலையில் உலா வந்த கரடி
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே சாலையில் உலா வந்த கரடி

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் உள்ள பெரியார் நகர் கிராமத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதி வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியாக உள்ளதால் இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலையில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கரடி ஒன்று அந்த சாலை வழியாக சாவகாசமாக நடந்து சென்றது. இந்த காட்சி அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. ஏற்கனவே இதே பகுதியில் கருஞ்சிறுத்தைகள், சிறுத்தைகள், காட்டெருமை, முள்ளம் பன்றி உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story