லாரி, டிராக்டர் செல்லாதவாறு பெரிய பள்ளம் தோண்டப்பட்டது
ஆரணி அருகே ஆற்று படுகை பகுதியில் லாரி, டிராக்டர் செல்லாதவாறு பெரிய பள்ளம் தோண்டப்பட்டது
திருவண்ணாமலை
ஆரணி
ஆரணியை அடுத்த தச்சூர் ஆற்று படுகை பகுதிகளில் தொடர்ந்து டிராக்டர், லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வருகிறது.
இதனை தடுக்க காவல்துறை, வருவாய்த் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் நித்யா, கிராம நிர்வாக அலுவலர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் மற்றும் போலீசார் தச்சூர் ஆற்று படுகை பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
பின்னர் அந்த பகுதியில் லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்லாதவாறு பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டது.
மேலும் தச்சூர் மோட்டூர் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மணல் குவிக்கப்பட்டிருந்தன.
அவ்வாறு குவிக்கப்பட்டு இருந்த மணலை வருவாய் துறையினர் மீட்டு பொதுப்பணி துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story