கொடைக்கானல் மலைப்பாதையில் வலம் வந்த காட்டெருமை; வாகன ஓட்டிகள் அச்சம்


கொடைக்கானல் மலைப்பாதையில் வலம் வந்த காட்டெருமை; வாகன ஓட்டிகள் அச்சம்
x
தினத்தந்தி 4 Jun 2023 2:30 AM IST (Updated: 4 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் மலைப்பாதையில் காட்டெருமை வலம் வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் வனப்பகுதியில் இருந்து, நகருக்குள் காட்டெருமைகள் புகுந்து சுற்றுலா பயணிகளையும், குடியிருப்புவாசிகளையும் மிரள வைப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதன்படி நேற்று மாலை கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில், செண்பகனூர் பகுதியில் காட்டெருமை ஒன்று வலம் வந்தது.

மலைப்பாதையில் சிறிதுதூரம் வாகனங்களை பின்தொடர்ந்து நடந்து சென்றது. மிரள வைக்கும் கம்பீர தோற்றத்துடன் வந்த காட்டெருமையை கண்ட சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அச்சத்தில் உறைந்த அவர்கள் ஆங்காங்கே மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன்பிறகே போக்குவரத்து சீரானது. எனவே வனப்பகுதியில் இருந்து காட்டெருமைகள் ஊருக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story