செந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்து காட்டெருமை சாவு


செந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்து காட்டெருமை சாவு
x
தினத்தந்தி 20 May 2023 2:30 AM IST (Updated: 20 May 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்து காட்டெருமை இறந்துபோனது.

திண்டுக்கல்

நத்தம் அருகே செந்துறை பழனிபட்டியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. கணேசன் நேற்று காலை தனது தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்த அவர், உடனடியாக வனத்துறையினர் மற்றும் நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் பொக்லைன் எந்திரம் மூலம் கிணற்றில் இறந்து கிடந்த காட்டெருமையின் உடலை மீட்டனர்.

பின்னர் கோசுகுறிச்சி கால்நடை டாக்டர் ராஜேந்திரன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் காட்டெருமையை உடற்கூறு ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் முன்னிலையில் காட்டெருமை உடல் அங்குள்ள வனப்பகுதியில் குழித்தோண்டி புதைக்கப்பட்டது. வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த காட்டெருமை கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.


Next Story