கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை சாவு
குன்னூரில் கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை இறந்தது.
குன்னூர்,
குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமைகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் உலா வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்தநிலையில் குன்னூர் உழவர் சந்தை பகுதியில் உள்ள குடிநீர் கிணறு பகுதிக்கு காட்டெருமை வந்தது. அங்கு தண்ணீரை அருந்தி கொண்டிருந்த போது, காட்டெருமை தவறி கிணற்றுக்குள் விழுந்து இறந்து உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து கிணற்றில் இறந்து கிடந்த காட்டெருமையை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர். மேலும் கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்தது 2 வயதான ஆண் காட்டெருமை ஆகும். அதன் பின்னர் காட்டெருமை உடல் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது.