முசிறி அருகே கிணற்றில் விழுந்து சிறுவன் சாவு
முசிறி அருகே கிணற்றில் விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
முசிறி, ஆக.21-
முசிறியை அடுத்த ஏ.அந்தரப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் உதேஷ் (வயது 7). இவன் அருகே உள்ள தனியா ருக்கு சொந்தமான தோட்டத்துக்கு சென்றுள்ளான். இந்த நிலையில் அவன் பம்பு செட் தண்ணீர் தொட்டியில் குளித்து கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் இருந்து அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்தான். இதை யாரும் கவனிக்காததால் அவன் கிணற்றில் முழ்கி இறந்தான். இந்த நிலையில் மகன் வீடு திரும்பாததால் அவனை தேடி ராஜேந்திரன் தோட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது, கிணற்றுக்கு அருகே உதேசின் டவுசர் மற்றும் மேல் சட்டை மட்டும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கிணற்றுக்குள் விழுந்து இருக்கலாம் என எண்ணி முசிறி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் தேடியதில் உதேஷ் பிணமாக மீட்கப்பட்டான். மகனின் உடலை பார்த்து ராஜேந்திரன் கதறி அழுதது பரிதாபமாக இறந்தது. இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்