பாட்டில் மூடியை விழுங்கிய சிறுவன் சாவு


பாட்டில் மூடியை விழுங்கிய சிறுவன் சாவு
x

பாட்டில் மூடியை விழுங்கிய சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

விருதுநகர்

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு காந்திநகரை சேர்ந்தவர் நாராயண மூர்த்தி. இவருடைய மகன் முத்துமுருகன் (வயது 5). இவன் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் இருந்த பாட்டில் மூடியை விழுங்கிவிட்டான். உடனே மூச்சுத்திணறி உயிருக்கு போராடிய அவனை, சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் முத்து முருகன் உயிரிழந்தான். இந்த விபரீத சம்பவம் குறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story