பள்ளிக்கூடம் சென்று வந்த சிறுவன் திடீர் சாவு


பள்ளிக்கூடம் சென்று வந்த சிறுவன் திடீர் சாவு
x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளிக்கூடம் சென்று வந்த சிறுவன் திடீரென இறந்தான்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 29). கொத்தனார். இவருடைய மனைவி சந்தானலட்சுமி. இவர்களது மகன் ஜெயப்பிரகாஷ் (4). எல்.கே.ஜி. படித்து வந்த இவன், பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தான். பின்னர் தூங்கினான்.

அவனை தாய் சந்தானலட்சுமி எழுப்பினார். அப்போது ஜெயப்பிரகாஷ் பேச்சுமூச்சு இல்லாமல் இருந்தான். உடனே அவனை சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுவனை டாக்டர் பரிசோதனை செய்தபோது, அவன் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.இந்த சம்பவம் குறித்து கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.



Related Tags :
Next Story