ரெயில் மீது ஏறி விளையாடிய சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது


ரெயில் மீது ஏறி விளையாடிய சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது
x

மதுரை கூடல்நகரில் ரெயில் மீது ஏறி விளையாடிய சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுவனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மதுரை

மதுரை கூடல்நகரில் ரெயில் மீது ஏறி விளையாடிய சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுவனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிறுவன் மீது மின்சாரம் தாக்கியது

மதுரை கோட்டத்தில் பெரும்பாலான ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. அந்த மின் பாதையில் ரெயில்களை இயக்குவதற்காக 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. இது பற்றிய எச்சரிக்கை விளம்பரங்கள் ரெயில் நிலையங்களிலும் முக்கிய இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் மீறி நேற்று முல்லை நகர் பழனி என்பவரின் மகன் விக்னேஸ்வர் (வயது 17) சிறுவன் தனது நண்பர்களுடன் கூடல் நகர் சரக்கு நிலையப் பகுதியில் விளையாட வந்துள்ளான். விளையாடிக் கொண்டிருக்கும்போது மதியம் 2.45 மணியளவில் அருகில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலின் பெட்டி மீது ஏறியுள்ளான். 25 ஆயிரம் வோல்ட் பாயும் மின்பாதையிலிருந்து மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்தான்.

ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீடுகளில் பயன்படும் 230 வோல்ட் மின்சாரம் தாக்குதலையே தாங்க முடியாது. 25 ஆயிரம் வோல்ட் மின்சார தாக்குதல் பெரிய ஆபத்தை விளைவிக்கும். எனவே பொதுமக்கள் பெரும் ஆபத்தை விளைவிக்கும் மின் பாதையை நெருங்க வேண்டாம் என மீண்டும் ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுக்கிறது.


Related Tags :
Next Story