சாலையோர பள்ளத்தில் சிக்கிய செங்கல் லாரி


சாலையோர பள்ளத்தில் சிக்கிய செங்கல் லாரி
x

சாலையோர பள்ளத்தில் செங்கல் லாரி சிக்கியது.

புதுக்கோட்டை

கீரமங்கலம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், செரியலூர், நகரம், சேந்தன்குடி, கொத்தமங்கலம், பனங்குளம், குளமங்கலம், மேற்பனைக்காடு மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. அதிலும் கிராம சாலைகள் குறுகலாக இருப்பதால் அந்த சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களின் சக்கரங்கள் அடிக்கடி சாலை ஓரங்களில் புதைந்து, நின்றுவிடுவதால் போக்குவரத்து தடைபடுகிறது. சில நாட்களுக்கு முன்பு செரியலூரில் சாலையோரத்தில் புதைந்து நின்ற லாரி, பின்னர் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று கொத்தமங்கலத்தில் செங்கல் ஏற்றி வந்த லாரி சாலையோரத்தில் சக்கரம் புதைந்து நின்றது. இதையடுத்து மொத்த செங்கலும் இறக்கப்பட்ட பிறகு, அந்த லாரி மீட்கப்பட்டது. மேலும் சாலையோரத்திலேயே குடிநீர் குழாய்களுக்காக நீண்ட தூரத்திற்கு பள்ளம் தோண்டியுள்ளதாலும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.


Next Story