விறுவிறுப்பாக நடந்த மாட்டு வண்டி பந்தயம்


விறுவிறுப்பாக நடந்த மாட்டு வண்டி பந்தயம்
x

விறுவிறுப்பாக நடந்த மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

மதுரை

மேலூர்

மேலூரில் தெற்குப்பட்டியில் உள்ள ஸ்ரீகாஞ்சி வனம் சுவாமி, முளைக்கட்டு அம்மன் பங்குனி உற்சவ விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. தெற்குப்பட்டி திருவாதவூர் ரோட்டில் நடைபெற்ற போட்டியில் பெரிய மாட்டு வண்டியில் 7 ஜோடிகள் கலந்து கொண்டன. முதல் பரிசினை புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஆர்.ஆர். இளவரசி வைஷ்ணவி மற்றும் தன்வந் பிரசாத், மேலூர் தெற்குபட்டி வாழைக்காய் பிரபு பிரேம் பிரதர்ஸ் இவர்களின் மாடு முதல் பரிசை வென்றது. ஆட்டுக்குளம் அழகர்மலையான் நகுல் நிலாவின் மாட்டு வண்டி 2-ம் பரிசினையும், மதுரை கள்ளந்திரி ஐந்துவேல் சுவாமி துணை, பூண்டி கேசவன் திருவை சின்னவர் இவர்களின் மாடு 3-ம் பரிசினையும், மேலூர் பதினெட்டங்குடி ஆனந்த், பரவை சின்னவேலம்மாள் இவர்களின் மாடு 4-ம் பரிசையும் வென்றன. சின்ன மாட்டு வண்டி போட்டியில் 17 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் நரசிங்கம்பட்டி பவித்ரா, பூலாங்குளம் தொட்டிச்சி அம்மன் இவர்களின் மாடு முதல் பரிசு வென்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்பேத்தி மருதுபாண்டிய வள்ளாலதேவர் இணைந்து கொட்டகுடி முத்துராமன் இவர்களின் மாடு இரண்டாம் பரிசினையும், மேலூர் துவரங்குளம் அய்யப்பன் கரும்புச் செல்வம் இவரின் மாடு மூன்றாம் பரிசினையும், மதுரை தேத்தாம்பட்டி மகேஷ், கயத்தாறு பி.கே.பி நண்பர்கள் இவர்களின் மாடு நான்காம் பரிசையும் வென்றது. வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்க ப்பரிசு வழங்கப்பட்டது.


Next Story