விருத்தாசலம் அருகேரெயில்வே கேட் பகுதியில் பழுதாகி நின்ற லாரிவாகன போக்குவரத்து பாதிப்பு


விருத்தாசலம் அருகேரெயில்வே கேட் பகுதியில் பழுதாகி நின்ற லாரிவாகன போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே ரெயில்வே கேட் பகுதியில் பழுதாகி நின்ற லாரி யால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த சின்ன கண்டியாங்குப்பத்தில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. காட்டுக்கூடலூர் விருத்தாசலம் இணைப்பு சாலை என்பதால் இப்பகுதி வழியாக வாகன போக்குவரத்து மிகுந்து இருக்கும். நேற்று காலையில் அந்த வழியாக விருத்தாசலம் நோக்கி கிராவல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது சின்னகண்டியாங்குப்பம் ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்ற போது, திடீரென பழுதாகி நடுவழியில் நின்றது.

ரெயில்வே கேட் மூடும் பகுதியை லாரி கடந்ததால், ரெயில் வருகையின் போது கேட் அடைப்பதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை. இருப்பினும், லாாடி நின்ற பகுதி குறுகிய சாலையை கொண்டதாகும். இதானல், இருமார்க்கத்தில் இருந்தும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். பின்னர் அருகே உள்ள கிராமங்களின் வழியாக மாற்று பாதையில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்றன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story