தாசில்தார் அலுவலகத்தில் நுழைந்த காட்டெருமை


தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தாசில்தார் அலுவலகத்தில் நுழைந்த காட்டெருமை

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் மற்றும் கோர்ட்டு வளாகம், எப்போதும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடமாக உள்ளது. இங்கு நேற்று மதியம் காட்டெருமை ஒன்று தாசில்தார் அலுவலக வளாகத்திற்குள் புகுந்து அங்குள்ள கம்பி வேலியை தாண்டி சென்று புற்களை மேய்ந்தது. பின்னர் அலுவலக வளாகத்தில் உலா வந்தது. காட்டெருமையை கண்ட பொதுமக்களும், அலுவலர்களும் அச்சமடைந்தனர். மேலும் அவர்கள் கட்டிடத்துக்குள் சென்று பாதுகாப்பாக நின்று கொண்டனர். சற்று நேரம் அப்பகுதியில் உலா வந்த காட்டெருமை, அதன்பிறகு அங்கிருந்து சென்று அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story