கூடலூர் பகுதியில் விளைச்சல் அமோகம்: பூத்துக்குலுங்கும் செண்டுமல்லி பூக்கள்


கூடலூர் பகுதியில் விளைச்சல் அமோகம்:  பூத்துக்குலுங்கும் செண்டுமல்லி பூக்கள்
x

கூடலூர் பகுதியில் அமோ விளைச்சல் அடைந்ததால் செண்டுமல்லி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன

தேனி

கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய பெருமாள் கோவில் புலம், கழுதைமேடு, வெட்டுக்காடு, காக்கான் ஓடை, மந்தை வாய்க்கால் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் செண்டுமல்லி பூக்கள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த வைகாசி மாதம் விவசாயிகள் செண்டுமல்லி பூக்கள் செடிகளை நடவு செய்தனர்.

இந்த செடிகள் அமோக விளைச்சல் அடைந்து பூக்கள் பூக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து விவசாயிகள் பூக்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்த பூக்களை கம்பம், மதுரை பூ மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இந்தப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்ததால் ஒரு கிலோ செண்டுமல்லி பூவை ரூ.50 முதல் ரூ.80 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். இந்நிலையில் மழை குறைந்ததால் கடந்த சில நாட்களாக பூக்கள் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தற்போது 1 கிலோ செண்டுமல்லி பூ ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது


Next Story