தர்மபுரியில் சேரும், சகதியுமான சாலை


தர்மபுரியில் சேரும், சகதியுமான சாலை
x
தினத்தந்தி 14 Oct 2022 1:00 AM IST (Updated: 14 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி நகரில் சேரும், சகதியுமாய் உள்ள முக்கிய சாலையை உடனே சேர மிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி

தர்மபுரி நகரில் சேரும், சகதியுமாய் உள்ள முக்கிய சாலையை உடனே சேர மிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய சாலை

தர்மபுரி பஸ் நிலையம் அருகே பென்னாகரம் ரோட்டையும், ராஜகோபால் கவுண்டர் தெருவையும் இணைக்கும் ஏ.வி. தியேட்டர் சாலை வழியாக ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் ஆஸ்பத்திரிகள், வணிக நிறுவனங்கள், செல்போன் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிலையங்கள் என ஏராளமான கடைகள் இயங்கி வருகிறது.

இதன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பஸ் நிலையம் அருகில் உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் இந்த சாலையை கடத்து செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக இயங்கும் இந்த முக்கிய சாலை தற்போது குண்டும், குழியுமாய், சேறும்- சகதியுமாய் காட்சி அளிக்கிறது.

துர்நாற்றம் வீசுகிறது

எப்போதும் போக்குவரத்து அதிகமாக காணப்படும் இந்த சாலை கடந்த 2008-ம் ஆண்டு பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டது. அதன்பின்னர் சுமார் 14 ஆண்டுகளாக இந்த தெருவில் புதிய சாலை அமைக்கப்படாமல் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் இந்த சாலை போக்குவரத்துக்கு உபயோகமற்ற சாலையாக மாறிவிட்டது.

சாலை முழுவதும் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுப்புற தூய்மை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பாதாள சாக்கடை கழிவு நீரும், மழை நீரும் தேங்கி அந்த பகுதி வணிகர்களை பெரும் சங்கடத்திற்கு ஆளாக்கி உள்ளது.

சீரமைக்க கோரிக்கை

கடந்த சில நாட்களாக அந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்கள் நடந்தேறி வருகிறது. இரவு நேரங்களில் அந்த சாலை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக போர்கால அடிப்படையில் ஏ.வி.தியேட்டர் சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story