குருமலையில்சூழல் மேம்பாட்டு திட்டக்குழு அமைக்கும் முகாம்
குருமலையில் சூழல் மேம்பாட்டு திட்டக்குழு அமைக்கும் முகாம் நடந்தது.
அடுக்கம்பாறை
குருமலையில் சூழல் மேம்பாட்டு திட்டக்குழு அமைக்கும் முகாம் நடந்தது.
மலை கிராமங்களை ஒருங்கிணைத்து சூழல் மேம்பாட்டு திட்டக்குழு அமைக்க வேண்டும் என மாவட்ட வனஅலுவலர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, ஊசூரை அடுத்த குருமலையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். வனச்சரக அலுவலர் குமார் முன்னிலை வகித்தார். வனக்காப்பாளர் ரமேஷ் வரவேற்றார்.
இதில் மலை கிராமத்தில் வரைபடம் மூலம் மேற்கொள்ள வேண்டிய திட்ட பணிகள் குறித்து வனத்துறையினர் மலை கிராம மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த சூழல் மேம்பாட்டு குழு தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
மாதந்தோறும் நடைபெறும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தொடர்பாக, இந்தக் குழுவினர் நேரடியாக கலெக்டரை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.