மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பிரசார வாகனம்


மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பிரசார வாகனம்
x

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பிரசார வாகனத்தை முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் ேசர்க்கை அதிகரிக்க 2 பிரசார வாகனங்கள் தயார் செய்யப்பட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களை சார்ந்த 109 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 3 ஒன்றியங்களுக்கு ஒரு வாகனம் அனுப்பப்பட்டது.

இதன் தொடக்க நிகழ்ச்சி திருப்பத்தூர் ஒன்றியம் சின்ன வெங்காயப்பள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் தலைமை தாங்கி கொடியசைத்து பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், வட்டார கல்வி அலுவலர்கள் நெடுஞ்செழியன், கமல்நாதன், மேற்பார்வையாளர் சாக்கி, இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் செண்பகவள்ளி, பூபதி கோபிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாணவர்களுக்கு அரசு வழங்கி கொண்டு இருக்கிற நலத்திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் அனைவருக்கும் வழங்கி அரசு திட்டங்களை எடுத்துக் கூறினார்.


Next Story