கொட்டாம்பட்டி அருகே அய்யப்ப பக்தர்கள் வந்த கார் கவிழ்ந்தது
கொட்டாம்பட்டி அருகே அய்யப்ப பக்தர்கள் வந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ந்த விபத்தில் 3 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
மதுரை
கொட்டாம்பட்டி
சென்னையில் இருந்து அய்யப்ப பக்தர்கள், சபரிமலைக்கு செல்வதற்காக ஒரு காரில் வந்துள்ளனர். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள தற்காகுடி விலக்கு அருகே மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவரின் மீது மோதியது.
மேலும் நிற்காமல் சென்ற கார் எதிர்திசைக்கு சென்று அவ்வழியாக மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story