சாலையில் சென்றபோது திடீரென தீ பற்றி எரிந்த கார்
வாணியம்பாடி அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் தீ பற்றி எரிந்தது. இதில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தீப்பற்றி ஏரிந்த கார்
ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் பகுதியில் இருந்து ஓசூர் நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ெரயில்வே மேம்பாலத்தின் மீது நேற்று மதியம் 2 மணி அளவில் வந்தபோது திடீரென கார் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது.
இதைபார்த்ததும் காரை ஓட்டி வந்த இக்பால் அஹமத் (வயது 63) உடனடியாக காரை நிறுத்தி, காரில் தன்னுடன் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 5 பேரை பாதுகாப்பாக கீழே இறக்கி, தீைய அணைக்க முயற்சித்துள்ளார். அதற்குள் தீ மள மளவென பற்றி எரிந்ததால் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
என்ஜின் கோளாறு
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயா அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. என்ஜின் கோளாறு காரணமாக தீப்பிடித்து எறிந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.