மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஒருவர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஒருவர் படுகாயம்
x

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கரூர்

நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம் அருகே நெட்டையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 45). இவர் தனது மோட்டார் சைக்கிளில் நொய்யலுக்கு வந்து விட்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். சொட்டையூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக புகழூர் மாரியப்பன் பிள்ளைகாலனியை சேர்ந்த சவுந்தரராஜன் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக சக்கரவர்த்தியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சக்கரவர்த்தி கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் விபத்தை ஏற்படுத்திய சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிந்து, அந்த காரைபறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story