டயர் வெடித்ததால் மரத்தில் கார் மோதியது; 2 பேர் பலி


டயர் வெடித்ததால் மரத்தில் கார் மோதியது; 2 பேர் பலி
x

டயர் வெடித்ததால் மரத்தில் கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.

விருதுநகர்

திருச்சுழி,

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கத்தாளம்பட்டி கிரசர் அருகே உள்ள பாலவநத்தத்தை சேர்ந்தவர் பாரதி(வயது 30). இவருடைய நண்பர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த சண்முகசுதன்(32), பால்ராஜ் (61). இவர்கள் 3 பேரும் காரில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி காரில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது கத்தாளம்பட்டி கிரஷர் அருகே வந்த போது திடீரென கார் டயர் வெடித்தது. இதில் கார் நிலை தடுமாறி அருகே உள்ள புளியமரத்தில் மோதியது. இ்ந்த விபத்தில் பாரதி, சண்முகசுதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

இதில் படுகாயமடைந்த பால்ராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ைவத்தனர்.

இ்துகுறித்து தகவல் அறிந்த எம்.ரெட்டியபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விைரந்து வந்து விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story