சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் கார் மோதி விபத்து - அதிர்ஷ்டவசமாக 2 பேர் உயிர்தப்பினர்


சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் கார் மோதி விபத்து - அதிர்ஷ்டவசமாக 2 பேர் உயிர்தப்பினர்
x

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக 2 பேர் உயிர்தப்பினர்.

சென்னை

சென்னை அடுத்த அம்பத்தூரை சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியர் நாராயண் (வயது 22). அவரும், அவரது நண்பரான விவேகானந்தர் (40) என்பவரும் நேற்று காரில் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை நாராயண் ஓட்டிச்சென்றார்.

அந்த கார், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயலில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் பின்புறம் அதே திசையில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர்கள் ஓட்டி சென்ற கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி லாரியின் பின் பகுதியில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் அதில் பயணம் செய்த 2 பேரும் சீட் பெலட் அணிந்திருந்ததால் பாதுகாப்பு ஏர் பலூன் விரிந்தது. இதனால் மேற்கண்ட 2 பேரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பின்னர் கிரேன் உதவியால் விபத்துள்ளான காரை அங்கிருந்து மீட்டனர். இந்த சம்பவம் குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story