வீட்டுக்குள் புகுந்த கார்


வீட்டுக்குள் புகுந்த கார்
x

சேத்தியாத்தோப்பு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டிற்குள் புகுந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் தீபக்குமார். கார் டிரைவரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (வயது 50) ரூபினி (58) ஆகியோருடன் காரில் விழுப்புரம் சென்று விட்டு மீண்டும் நேற்று முன்தினம் இரவு காட்டுமன்னார்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார். சேத்தியாத்தோப்பு அடுத்த சிதம்பரம்-விருத்தாசலம் சாலையில் அம்மன் குப்பம் தொடக்கப் பள்ளி அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையோரம் இருந்த கூரை வீட்டுக்குள் புகுந்தது. கார் மோதிய சத்தம் கேட்டதும் வீட்டின் உரிமையாளர் கலைச்செல்வன் அலறி அடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டார். இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story