பள்ளத்தில் பாய்ந்த கார்; 3 பெண்கள் காயம்


பள்ளத்தில் பாய்ந்த கார்; 3 பெண்கள் காயம்
x

பள்ளத்தில் கார் பாய்ந்ததில் 3 பெண்கள் காயமடைந்தனர்.

பெரம்பலூர்

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளியை சேர்ந்த தங்கராஜ். இவரது மகன் மிலன் (வயது 27). இவர் தனது உறவினர்களுடன் காரில் சென்னை சென்று விட்டு மீண்டும் குமுளிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மிலன் காரை ஓட்டினார். நேற்று மாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் துறைமங்கலம் 3 ரோடு மேம்பாலத்தில் வந்த போது பலத்த மழை பெய்தது. அப்போது மேம்பாலத்தை கடந்த போது மிலனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு கம்பி மீது மோதி நிற்காமல் சினிமா பாணியில் பள்ளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 3 பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேன் உதவியுடன் பள்ளத்தில் இருந்து கார் மீட்கப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story