நடுரோட்டில் சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்தது


நடுரோட்டில் சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்தது
x

இலுப்பூர் அருகே நடுரோட்டில் சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்தது.

புதுக்கோட்டை

திருச்சி பிராட்டியூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை அதே பகுதியை சேர்ந்த அஜீத் என்பவர் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று திருச்சியில் இருந்து விராலிமலை வழியாக பரம்பூருக்கு பெயிண்ட் பொருட்களை ஏற்றிக்கொண்டு அஜீத் சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இலுப்பூர் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சரக்கு வாகனத்தின் முன் பகுதியில் இருந்து லேசான புகை வந்தது. உடனே அஜீத் சரக்கு வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி பார்த்தபோது, சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், சரக்கு வாகனத்தின் முன்புறம் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story