பெண்ணை தாக்கிய கணவர் மீது வழக்கு


பெண்ணை தாக்கிய கணவர் மீது வழக்கு
x

ராமநாதபுரம் அருகே பெண்ணை தாக்கிய கணவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

உத்தரகோசமங்கை,

ராமநாதபுரம் தேவேந்திரர்நகரை சேர்ந்தவர் பத்மநாபன் மகன் ஜீவகுமார் (வயது 47). இவரின் மனைவி மகாலட்சுமி (37). திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாலட்சுமி கோபித்து கொண்டு களரியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டராம். மனைவி வீட்டிற்கு வராததால் களரிக்கு சென்ற ஜீவகுமார் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அவர் வரமறுத்ததால் அவதூறாக பேசி கழுத்தை நெரித்து கன்னத்தில் அறைந்துவிட்டதாக தெரிகிறது.

இதில் காதில் ரத்தம் வந்த நிலையில் மகாலட்சுமி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் உத்தரகோசமங்கை போலீசார் வழக்குபதிவு செய்து ஜீவகுமாரை தேடிவருகின்றனர்.


Related Tags :
Next Story